முன்னாள் ஜனாதிபதிகளின் வசதிகள் தொடர்பில் ஆய்வு; புதிய அரசாங்கம் அதிரடி தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகள் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மூலம் அல்லது ஏனைய அமைச்சுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, ஒவ்வொரு பாதுகாப்பு துறைகளுக்காக வழங்கப்பட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கையும் ஆராயப்படவுள்ளது.
குறித்த பாதுகாப்பு துறைகளுக்காக வாடகை அடிப்படையில் கட்டிடங்கள் வழங்கப்பட்டிருப்பின் அதற்கு செலவிடப்படும் மாதாந்த வாடகை மற்றும் வழங்கப்பட்டுள்ள ஏனைய வசதிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைக் கோரல்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் தொடர்பில் மீள ஆய்வு செய்வது தொடர்பில் அமைச்சரவை நியமித்துள்ள குழு மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.