முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெறுக்கும் இளையோர் சமுதாயம்: நடக்கப்போவது என்ன?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெறுக்கும் இளையோர் சமுதாயம்: நடக்கப்போவது என்ன?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இதனால் சமூக ஊடகங்களில் நேர்மறையான மற்றும் ஆதரவான பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாம் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இந்த நாடாளுமன்ற தெர்தலில் போட்டியிடுவது இல்லை எனவும் தீர்மானித்துள்ளனர்.

அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 17.27 வீகித வாக்குகளை பெற்றிருந்தும் கூட தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார்.

மேலும், காமினி லோககே, ஜோன் செனவிரத்ன, மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பாரம்பரிய கட்சிகள் அதிகளவான இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு பயந்த ஒதுங்குவதாகவும் இவர்களுக்கு வாக்கு பலம் இல்லை எனவும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால், சமூக வளைத்தளங்களை பொருத்தவரை இளம் தலைமுறையினரும் புதிய ஆட்சியாளர்களை வரவேற்பதில் பெரும் ஆர்வம் காட்டுவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

காரணம் ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பதிவுளை இடும் பட்சத்தில் அதன் கீமே கருத்துக்கள் அதற்கு ஆதரவாகவே இடப்படுகின்றன.

உதாரணமாக, “உங்களுக்கு வயதாகிவிட்டது, நீங்கள் போட்டிடாதே நல்லது, நாடகமாடவேண்டாம், உங்களுக்கு வாக்குபலம் இல்லை“ போன்ற கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கின்றது.

இம்முறை வித்தியாசமான மற்றும் முற்றிலும் மாறுபட்ட ஒரு முதல் நாடாளுமன்ற அமர்வை வெகுவிரைவில் காணலாம் எனவும் எதிர்பார்ப்பதாகவும் இளையோர் சமுதாயம் கூக்குரலெழுப்பி வருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

CATEGORIES
Share This