இலங்கை வர அனுமதி கோரும் முன்னாள் அமைச்சரின் மகன்: ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்பு

இலங்கை வர அனுமதி கோரும் முன்னாள் அமைச்சரின் மகன்: ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்ததன் பின்னர் நாட்டை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் சந்தேகநபரான முன்னாள் பிரதி அமைச்சர் நியோமால் பெரேராவின் மகனுக்கு மீண்டும் இந்நாட்டிற்கு வர அனுமதி வழங்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று (02) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இடம்பெற்ற போராட்டத்தின்போது ஜூலை மாதம் 9ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் அன்ரூ இவோன் பெரேரா, கனடாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது சந்தேகநபரை மீள இலங்கைக்கு வர அனுமதி வழங்குமாறு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோட்டை நீதவான் நீதிபதி தனூஜா லக்மாலியிடம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் 5ஆவது சந்தேகநபரான அன்ரூ இவோன் பெரேரா வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முடியாதென நீதிமன்றம் தடை விதித்திருந்தாக சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

”குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது தவறான வழிநடத்தல்கள் காரணமாக இவர் சந்தேகநபராக மாறியுள்ளார். இச் சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பியோடியதாக குற்றப் புலானாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

அதன்படி, சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதால் மீள இலங்கைக்கு வர முடியாது என்று சட்டத்தரணி மைத்திரி குணரட்ன தெரிவித்தார்.

சந்தேகநபர் வழக்குக்காக வருகைத் தர எதிர்ப்பார்த்திருந்தாலும் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கைக்கு வர அனுமதி வழங்கினால் வருகைத்தந்து மறுநாள் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

குறித்த சந்தேகநபர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளதால் அவருக்கு இந்நாட்டிற்கு வருகைத்தர அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.

ஆனால் இந்த மனுவை நீதிபதி நிராகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட மனுத் தொடர்பில் முன்னிலையான சட்டமா அதிபா் திணைக்கள சட்டத்தரணி கேட்டுக் கொண்டதற்கு அமைவாக குறித்த வழக்கு இம்மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This