இந்திய இராணுவ மருத்துவச் சேவை இயக்குநராக ஆர்த்தி சரின் நியமனம்: முதல் பெண் அதிகாரி
கடற்படை துணைத் தளபதியும் மருத்துவருமான ஆர்த்தி சரின் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய இராணுவ மருத்துவச் சேவைகளின் இயக்குநராக (Director General of Armed forces medical – DGAFMS) பதவியேற்றுக் கொண்டார்.
பாதுகாப்பு படைகளின் மருத்துவ விவகாரங்களுக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் இப் பதவியின் 46 ஆவது இயக்குநரும் முதல் பெண் அதிகாரியும் இவர் ஆவார்.
புனே இராணுவ மருத்துவக் கல்லூரியின் மாணவியான இவர், கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவ சேவையில் இணைந்து கொண்டார்.
கதிரியக்க சிகிச்சை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், அவரது 28 வருட சேவையில் பல முக்கிய பொறுப்புக்களில் கடமையாற்றியுள்ளார்.
விமானப்படை, கடற்படை மருத்துவச் சேவைகளின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இந்திய செய்திகள்