இந்தியாவில் தலைதூக்கும் வேலையில்லா திண்டாட்டம்; முதலிடத்தில் கேரளா

இந்தியாவில் தலைதூக்கும் வேலையில்லா திண்டாட்டம்; முதலிடத்தில் கேரளா

இந்திய மாநிலங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2024 ஜூன் வரையிலான காலப்பகுதியில் வேலையின்மை தொடர்பில் நடத்தப்பட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பின் (Periodic Labor Force Survey – PLFS)முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியானது.

இக் கணக்கெடுப்பில் வேலையின்மையால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கை கேரள மாநிலத்தில் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

கேரளாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 29.9 சதவீதத்தினருக்கு தொழிலில்லை. இவர்களில் 47.1 சதவீதமானோர் பெண்கள்.

அதன்படி இந்தியாவில் வேலையின்மையால் அவதியுறும் மாநிலங்கள் பட்டியலில், கேரளா – 29.9 சதவீதம், நாகலாந்து – 27.4 சதவீதம், மணிப்பூர் – 22.9 சதவீதம், லடாக் – 22.2 சதவீதம், அருணாச்சல பிரதேசம் – 20.9 சதவீதம், கோவா – 19.1 சதவீதம், பஞ்சாப் – 18.8 சதவீதம், ஆந்திரப் பிரதேசம் 17.5 சதவீதம்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக தலைதூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This