சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குற்றவாளி என தீர்ப்பு: ஒக்டோபர் மாதம் தண்டனை

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குற்றவாளி என தீர்ப்பு: ஒக்டோபர் மாதம் தண்டனை

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதியன்று தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரனுக்கு ஆறிலிருந்து ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

முதல் நாள் வழக்கு விசாரணை செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெற்றது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அரசு ஊழியர் பதவி வகித்தபோது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக ஈஸ்வரன் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பிரிவு 165ன் கீழ் சுமத்தப்பட்டன.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165, ஒரு பொதுச் சேவை ஊழியர், அவர் அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும், விலைமதிப்புள்ள எதையும், இலவசமாக அல்லது போதிய கட்டணமின்றி ஏற்றுக்கொள்வது அல்லது பெறுவது குற்றமாகும்.

விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவும் ஈஸ்வரன் மீது ஒரு குற்றம் சுமத்தப்பட்டது.

அமைச்சர் பதவி வகித்தபோது $400,000 இற்கும் அதிக மதிப்புள்ள பொருள்களை ஈஸ்வரன் அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

$380,000 தொகையையும் முறையற்ற வகையில் பெறப்பட்ட அன்பளிப்புகளையும் அரசாங்கத்திடம் ஈஸ்வரன் திருப்பிக் கொடுத்துவிட்டத்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு ஒக்டோபர் மாபதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்போது அவருக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This