எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்ற பிரபல யூடியூபர்!

எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்ற பிரபல யூடியூபர்!

உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவரது வலைதள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம்.

ஆனால் இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த வீடியோக்களையும் பதிவிட்டது கிடையாது. மிகுந்த பொருட் செலவில் தான் உருவாக்கும் வீடியோக்களை அவர் யூ-டியூப்பில் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் எக்ஸ் தளத்தின் அதிபரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை என கேள்வி கேட்டிறிந்தார்.

அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், “என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என தனது தயக்கத்தை கூறியிருந்தார்.

அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுடன் அவரது பதிவில், எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.

அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் தனது பதிவை மறு பகிர்வு செய்து, மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது என கூறியிருந்தார்.

அவரது மிஸ்டர் பீஸ்ட்டின் வீடியோ மிகவும் வேடிக்கையாகவும், சுவராஸ்யமாகவும் இருந்ததாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது முதல் வீடியோவை 2.7 கோடி வருவாயைப் பெற்றது.

CATEGORIES
TAGS
Share This