துர்கா பூஜைக்கு 5 இலட்சம் கேட்டு இந்து அமைப்புக்களுக்கு மிரட்டல்

துர்கா பூஜைக்கு 5 இலட்சம் கேட்டு இந்து அமைப்புக்களுக்கு மிரட்டல்

பங்களாதேஷில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பந்தல் அமைத்து அங்கு பிரமாண்ட துர்க்கை சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர். கடந்த சில ஆண்டாக துர்கா பூஜை காலங்களில் இந்துக்கள்மீது தாக்குதல் நடப்பது வழக்கமாக உள்ளது.

இதற்கிடையே, கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட உள்ளது என இந்து அமைப்புகள் தெரிவித்தன. துர்கா பூஜையின்போது இந்துக்கள் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என பங்களாதேஷ் அரசு உத்தரவிட்டது.

துர்கா பூஜை பந்தல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்க உள்ளது என உள்துறை ஆலோசகர் தெரிவித்தார்.

இந்நிலையில், துர்கா பூஜை கொண்டாட உள்ள சில மண்டல்களுக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும். அப்படி தந்தால் மட்டுமே பூஜை நடத்த முடியும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுதொடர்பாக மண்டல்களின் பொறுப்பாளர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

CATEGORIES
Share This