புதிய ஜனாதிபதி சமஸ்டி தீர்வை முன்னடுத்தால் ஒத்துழைக்க தயார்; பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

புதிய ஜனாதிபதி சமஸ்டி தீர்வை முன்னடுத்தால் ஒத்துழைக்க தயார்; பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

தமிழ் ஒரு தனிதேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு சமஸ்டி தீர்வை நோக்கி பயணிக்காமல் அந்த மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை தெற்கிலே மாற்றத்துக்கு ஆணை வழங்கிய சிங்கள மக்களுக்கு நேர்மையாக சொல்லவேண்டும் அதேவேளை சமஸ்டி தீர்வை நோக்கி ஜனாதிபதி அனுரா தகுமார திஸநாயக்க செயற்பாட்டை முன்னெடுத்தால் தமிழ் தேசிய முன்னணி ஒத்துழைக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 21 ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் விசேடமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் தேசியத்தை தங்கள் மனதிலே கொண்டு தங்கள் விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளனர் என்பது ஒரு தெளிவான ஒரு செய்தி.

இந்த நிலையில் தமிழ் மக்களின் 75 வருடங்களுக்கு மேலாக எத்தனையோ சவால்கள் மத்தியில் உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளனர் இதற்கு நாங்கள் தலைகுனிகின்றோம். இந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கேட்டிருந்தது.

வடகிழக்கிலே வழமையாக 80 வீதம் வாக்காளார் விகிதாசாரம் இருக்கின்ற இடத்திலே இந்த தேர்தலில் இந்த விகிதாசாரம் அதிகளவில் குறைந்து வடக்கில் விசேடமாக யாழ் தேர்தல் தொகுதியில் 65 வீதமும் மட்டக்களப்பு திருகோணமலையில் 70 வீதத்துக்கும் குறைவாகவும் வன்னி தேர்தல் தொகுதியில் 68 வீதம் அளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தல் முறைமை இலங்கை அரசு கட்டுமானம் என்ற கருத்தை ஏற்று வடகிழக்கிலுள்ள அனைத்து தேர்தல் மாவட்டத்தில் மக்கள் குறைந்தது 30 வீதம் பகிஸ்கரித்தும் 35 வீதம் அளவிற்கு அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை இந்த தேர்தலில் ஆணித்தரமாக நிலைநாட்டி அதனைதாண்டி தமிழ் பொதுவேட்பாளர் அதி உச்;ச தமிழ் தேசியத்தை பேசி தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு வாக்களித்த விகிதாசாரத்தை பார்கின்றபோது வடகிழக்கில் அறுதி பெரும்பான்மை மிக வெளிப்படையாக தமிழ் தேசியத்தை வலியுறுத்தி அதற்காக நின்றதற்கு தமிழ் மக்கள் இந்த தேர்தல் ஊடாக நிரூபித்துள்ளனர்

அதுமட்டுமல்லாது தமிழ் தேசியவாதத்திலுள்ள தந்தையாக கருதப்படுகின்ற தந்தை செல்வநாயகம் அவர்களுடைய பாரம் பெரிய கட்சியாக இருக்;க கூடிய தமிழரசு கட்சி மேல் எத்தனையே சதாப்தங்கள் ஊடாக வைத்திருந்த நம்பிகையில் அவர்களும் தமிழ் தேசியத்துக்கு நேர்மையாக பயணிப்பார்கள் தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வு மட்டும்தான் சாத்தியம் என்ற கருத்துக்களை இந்த தேர்தல் காலத்திலும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர்களும் சஜித் பிரேமதாஸாவுக்கு வாக்களிக்குமாறு கேட்ட வாக்குகளையும்; தமிழ் தேசியத்தை கைவிட்டு மக்கள்; ஒரு தென்னிலங்கையில் சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்ததாக கருதமுடியாது. ஏன் என்றால் தங்களுடைய தமிழ் தேசியத்தின் தந்தையின் கட்சியினுடைய தலைவர்கள் வந்து அந்தளவு மோசமாக நடந்து கொள்ளமாட்டார்கள் என்ற ஒரு அடிப்படை நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்திருக்கும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் வைத்திருக்கின்றோம்

CATEGORIES
Share This