ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் அநுரகுமார; இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் அநுரகுமார; இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.

இதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதில் சுமார் 56 லட்சம் வாக்குகளை பெற்று அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்தார்.

நேற்று மாலை (22) அவரின் வெற்றியை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.

இதனிடையே, இலங்கையின் புதிய ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமாரவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியாவின் அயலக உறவு மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது.

எமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Manoshangar Rajagobal

இந்நிலையில், இந்திய பிரதமரின் வாழ்த்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி. நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒன்றாக, நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் பணியாற்றலாம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This