ஆதலினால் காதல் செய்வீர்…. மழழை பெருவீர்…. புட்டினின் போர்க்கால வேண்டுதல்!

ஆதலினால் காதல் செய்வீர்…. மழழை பெருவீர்…. புட்டினின் போர்க்கால வேண்டுதல்!

ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ரஷ்ய ராணுவத்தை உலகின் இரண்டாவது பெரிய ராணுவமாக விரிவுபடுத்த புட்டின் நடவடிக்கை எடுத்துள்ளார். ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 ஆல் அதிகரிக்கவும், மொத்தப் படையை 2.38 மில்லியனாக உயர்த்தவும், 1.5 மில்லியன் துணை படையையும் இந்த திட்டம் உருவாக்கிறது. இதன் பிரச்சார யுக்தியாகவே காதல் செய்வீர், மழழை பெருவீர், எனும் புட்டினின் போர்க்கால வேண்டுதல் வெளிவந்துள்ளது)

ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, காதல் செய்வீர், மழழை பெருவீர், எனும் புட்டினின் போர்க்கால வேண்டுதல் என்பது வெறுமனே இனத்தொகையை கூட்டுவது மட்டுமன்றி, நீண்ட கால போர்த்திட்டத்திற்கு அமைய ரஷ்ய இராணுவத்தை பலமாக்குவதாகும் என்றே மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நாட்டின் இன வீழ்ச்சியை எதிர்த்துப் போராட, வேலை இடைவேளையின் போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்களை வலியுறுத்தும் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளமை சர்வதேச ரீதியில் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

ரஷ்யாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு அசாதாரண முயற்சியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடங்கியுள்ளார். ரஷ்யர்கள் தங்கள் வேலை இடைவேளையின் போது உடலுறவு கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதுவே தற்போது பலராலும் விமர்சிக்கப்படும், வேலை இடைவேளையின் போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் எனும் புட்டினின் அறிக்கையை உலகம் பல்வேறு கோணங்களில் பார்க்கிறது.

இந்நடவடிக்கையானது ரஷ்ய நாட்டின் கருவுறுதல் விகிதத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தற்போது ஒரு பெண்ணுக்கு சுமார் 1.5 குழந்தைகளாக உள்ளது. ரஷ்ய மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 விகிதத்தை விட குறைவாகவே உள்ளது.

ரஷ்ய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை என்று புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்கால தலைவிதி நம்மில் எத்தனை பேர் சுகதேகியாக இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை எனவும் ரஷ்ய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதனை நிவிர்த்தி செய்யவே, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேலை இடைவேளையின் போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்கள் வலியுறுத்தப்பட்டனர் எனும் அறிக்கையால் பலர் வியப்புக்குள்ளாகினர்.

உக்ரைனில் நடந்து வரும் மோதலால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளைய குடிமக்களின் குடியேற்றத்தால் மோசமாகிவிட்ட ரஷ்யா மக்கள்தொகை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த வேண்டுதல் வந்துள்ளது.

ரஷ்ய மக்கள்தொகை சரிவை மாற்றியமைப்பது ஒரு முதன்மையான தேசிய முன்னுரிமை என்று புட்டின் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டின் எதிர்காலம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று அறிவித்தார்.

இதேவேளை ரஷ்ய சுகாதார மந்திரி டாக்டர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ் புதிய பிறப்பு கொள்கையை ஆதரிக்கிறார். குழந்தைகள் இல்லாததற்கு வேலைப்பளு என்பதனை நிராகரித்தார். வேலை இடைவேளையின் போது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இந்த புதிய கொள்கையானது பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான பரந்த கிரெம்ளின் முயற்சியின் ஒரு பிரச்சார விடயமாகும். மாஸ்கோவில் உள்ள பெண்களுக்கு அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு இலவச கருவுறுதல் சோதனைகள் இப்போது வழங்கப்படுகின்றன.

அத்முடன் ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் (MP Tatyana Butskaya) தட்யானா பூட்ஷ்கயா முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் பிறப்பு விகிதங்களைக் கண்காணித்து அறிக்கையிட வேண்டும் என்று முன்மொழிந்து உள்ளார். இது ஒவ்வொரு ஆண்டும் பிறப்புகளின் எண்ணிக்கையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

செலாயன்பின்ஸக் (Chelyabinsk) பகுதியில், இளம் பெண்களுக்கு அவர்களின் முதல் குழந்தை பிறந்ததற்கு £8,500 பவுண்ட்ஸ் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. அதேவேளை கருக்கலைப்புகளை அணுகுவதையும், விவாகரத்து கட்டணத்தை அதிகரிப்பதையும் ரஷ்ய அரசாங்கம் கடினமாக்குகிறது. அத்துடன் அரசியல் பொது நபர்கள் மற்றும் தேவாலயத் தலைவர்கள் அதிக பிறப்பு விகிதங்களை ஒரு தேசிய கடமையாக்க வாதிடுகின்றனர்.

அன்னா குஸ்னெட்சோவா மற்றும் ஜன்னா ரியாப்ட்சேவா போன்ற ரஷ்ய அரசியல்வாதிகள் பெண்கள் இளம் வயதிலேயே குழந்தைகளைப் பெறத் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஷ்ய ராணுவத்தை உலகின் இரண்டாவது பெரிய ராணுவமாக விரிவுபடுத்த புட்டின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரஷ்ய ராணுவத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய அதிபர் புட்டின் திட்டமிட்டு உள்ளார். தற்போது ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 ஆல் அதிகரிக்கவும், மொத்தப் படையை 2.38 மில்லியனாக உயர்த்தவும், 1.5 மில்லியன் சுறுசுறுப்பான துணை படையையும் இந்த திட்டம் உருவாக்கிறது.

இது சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவின் இராணுவத்தை உலகின் இரண்டாவது பெரிய இராணுவமாக மாற்றும். இந்த விரிவாக்கம் 2022ல் உக்ரைன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இராணுவ வீரர்களின் முந்தைய அதிகரிப்புகளைப் பின்பற்றுகிறது. நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் மற்றும் தற்போதைய உலகளாவிய நிலைமைகளுக்கு ஏற்பவும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த விரிவாக்கம் ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என ரஷ்ய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரில் உயிரிழப்புகள் :

உக்ரைன் போரில் தொடர் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய பெண்களை எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கடந்த வருடம் புட்டின் வலியுறுத்தி இருந்தார். ரஷ்ய பெண்கள் பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பதே வரவிருக்கும் தசாப்தங்களில் எங்கள் இலக்கு என்றும் ரஷ்ய அதிபர் கூறியிருந்தார்.

ரஷ்யப் பெண்கள் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்று, பெரிய குடும்பங்களாக மாற்றுமாறு விளாடிமிர் புடின் வலியுறுத்தினார். சோவியத் உடைவின் பின்னர் 1990 களில் இருந்து ரஷ்யாவின் பிறப்பு விகிதம் சீராக குறைந்து வருகிறது.

ரஷ்ய மக்கள் தொகையை அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு எங்கள் இலக்கு என்றும் புட்டின் கூறியிருந்தார். ரஷ்ய மக்களில் பலர் குடும்பத்தின் பாரம்பரியத்தை பராமரிக்கிறார்கள். அங்கு நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள் என்றும் திரு புட்டின் கூறினார்.

முன்பு ரஷ்ய குடும்பங்களில் எங்கள பாட்டி மற்றும் கொள்ளு பாட்டிகளுக்கு 7 மற்றும் 8 குழந்தைகள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்க. இந்த மரபுகளைப் பாதுகாப்போம், புத்துயிர் பெறுவோம். பல குழந்தைகளைப் பெறுவது, ஒரு பெரிய குடும்பம், ரஷ்யாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு விதிமுறையாக, வாழ்க்கை முறையாக மாற வேண்டும் எனவும் புட்டின் கோரியிருந்தார்.

CATEGORIES
Share This