இந்தியாவில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் இதுவரை 748 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக செயல்பாட்டாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும் விதமாக ரெயில்வே திணைக்கம் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த அறிக்கையின் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை நாடு முழுவதும் 40 ரெயில் விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகரிக்கும் விபத்துகளுக்கு ரெயில்வே பணியிடங்கள் நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளதே காரணம் எனவும், அரசு வந்தே பாரத் சொகுசு ரெயில்களை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் ரெயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.