பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: இந்தியாவும் ஆட்டம் கண்டது
பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட 5.8 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பின்னர் டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இலகுவான நடுக்கம் உணரப்பட்டது.
பஞ்சாபின் தென்மேற்கு பகுதியில் உள்ள தேரா காசி கான் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இதனால், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதேசமயம், திடீர் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளும் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், பைசலாபாத், மியான்வாலி, பக்கர், கமாலியா, கானேவால், பல்வால், சினியோட், ஹபிசாபாத், டோபா தேக் சிங் ஆகிய நகரங்களில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
எவ்வாறெனினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது சொத்து சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இரு வாரங்களில் டெல்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் இலகுவான நடுக்கம் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.