கனடாவில் வீட்டு வாடகை சடுதியாக அதிகரிப்பு: பெரும் சிரமத்தில் வீடற்றவர்கள்

கனடாவில் வீட்டு வாடகை சடுதியாக அதிகரிப்பு: பெரும் சிரமத்தில் வீடற்றவர்கள்

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் மட்டும் வாடகைத் தொகைகள் 22 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக Rentals.ca என்ற வீட்டு மனை தொடர்பான இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இரண்டு தடவைகள் வாடகை தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை மாகாண வாடகை அதிகரிப்பு வழிகாட்டல்களை விடவும் அதிக தொகையில் உயர்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை 1472 டொலர்களாக காணப்பட்டது.

எனினும், தற்பொழுது அந்த தொகை 1761 டொலர்களாக அதிகரித்துள்ளது. வீடு ஒன்று காலியாகும் போது பொது கட்டுப்பாட்டுக்கு அமைய தாங்கள் விரும்பிய தொகையில் வீட்டு வாடகை அதிகரிக்க முடியும்.

இதன் அடிப்படையில் அநேகமான வீட்டு உரிமையாளர்கள் வீடுகள் காலியாகும் போது வாடகை தொகையை வெகுவாக உயர்த்திக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு கூடுதல் அளவில் பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்படக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This