23 கோடி ரூபா சொத்துகளை வளர்ப்பு பிராணிகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி!

23 கோடி ரூபா சொத்துகளை வளர்ப்பு பிராணிகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி!

தனது பிள்ளைகளை கவனிக்காததால் 23 கோடி சொத்துகளை மூதாட்டி ஒருவர் பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது பிள்ளைகள் 3 பேருக்கும் சொத்துகளை கொடுப்பதாக உயில் எழுதி இருந்த நிலையில்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது யாரும் தன்னை பார்க்க வராததால் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார். இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவ மனையை துவக்கி, நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், பல பயனர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This