புதிய பிரதமருக்கு எதிராக பிரான்ஸில் பாரிய போராட்டம்: அதிகார அபகரிப்பு என விசனம்
Gமத்திய-வலது அரசியல்வாதியான மைக்கேல் பார்னியரைபுதிய பிரதமராக தேர்ந்தெடுக்கும் இம்மானுவேல் மெக்ரோனின் முடிவுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் 100,000 இற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி புறக்கணித்ததாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
வலதுசாரி பிரதமரை ஜனாதிபதி நியமித்ததை அதிகார அபகரிப்பு என்று தீவிர இடதுசாரி கட்சித் தலைவர் விமர்சித்தார்.
இதனிடையே பார்னியர் தனது முதல் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
பாரிஸ் வைத்தியசாலையில் ஊழியர்களை சந்தித்தார்.”அற்புதங்களைச் செய்யாமல், முன்னேற்றங்களைச் செய்ய முடியும்,” என்று தெளிவான பெரும்பான்மை இல்லாத பார்னியர் செய்தியாளர்களிடம் கூறினார்.
CATEGORIES உலகம்