ஈரானின் முக்கிய தலைவரின் கணக்குகள் நீக்கம்: மெட்டா நிறுவனம் அதிரடி!

ஈரானின் முக்கிய தலைவரின் கணக்குகள் நீக்கம்: மெட்டா நிறுவனம் அதிரடி!

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியையின் முகப்புத்தக (Facebook),இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளை தடைசெய்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதனால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அயதுல்லா அலி கமேனியின் கணக்குகளுடன், ஈரானின் வலையைமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சுமார் 200 முகப்புத்தக மற்றும் 125 இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மெட்டாவால் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களை கமேனி ஆதரித்ததோடு காசாவில் இஸ்ரேலுக்கு எதிரான போராளிகளின் நடவடிக்கைகளையும் ஆதரித்தார்.

அதேவேளை செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு ஆதரவாக அவர் கடுமையான கருத்துக்களையும் தெரிவித்தார்.

இதனால் மெட்டா அதன் உள்ளடக்கக் கொள்கைகளை மீண்டும் மீண்டும் மீறுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This