வீழ்ச்சியடையும் ரணிலின் திட்டங்கள்: 30 பேரணிகள் முழுமையாக இரத்து
ஜனாதிபதி தேர்தலுக்காக 90 பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரப் பிரிவு திட்டமிட்டிருந்த போதிலும், அத்திட்டம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, தற்போது 30 பேரணிகள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் அவர் நடத்திய பேரணிகளின் எண்ணிக்கையும், மீதமுள்ள இலக்குகளை அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்ய முடியாத நிலையும் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் குறைந்தது ஆறு தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார அலுவலகத்தில் பாரியளவில் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அலுவலகத்தின் தலைவர்கள், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது சார்பாக பயன்படுத்துவதற்காக ஏற்கனவே பெருந்தொகையான பணத்தை சேகரித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.