ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிவராத உண்மைகள்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் யூடியூப் சேனலுக்கு வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை மேற்கோள்காட்டி அவர் இவற்றை கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களைப் பெற்றுக கொடுப்பதற்காக, கத்தோலிக்க பத்திரிகையான “ஞானார்த்த பிரதீபய”வின் தலைமை ஆசிரியர் சிறில் காமினி நேற்று (19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிறில் காமினி கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்து விட்டு சென்றார்.
அதன் படி, இது தொடர்பான 8 விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று ஊடகவியலாளர் சந்திப்பு அழைப்பு விடுத்திருந்தார்.
கொழும்பு உயர்மறைமாவட்ட ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி,
“முதலாவது… 2018 நவம்பர் 30 ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் அது தொடர்பான விடயங்கள்.”
“இரண்டாவது… சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த IP முகவரியை யார் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி.”
“மூன்றாவது… வவுணதீவு சம்பவத்தை தவறாக சித்தரித்த சம்பவம்.”
“நான்காவதாக… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் கைப்பேசிக்கு வந்த அழைப்பு.”
“ஐந்தாவது… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் யார்?” என்ற கேள்விகளை விசாரணையின் போது வினவியதாக உயர்மறைமாவட்ட ஊடகபேச்சாளர் ஊடகங்களில் முன்வைத்தார்.