ஷேக் ஹசீனா தொடர்ந்தும் தங்கியிருப்பது இந்தியாவுக்கு ஆபத்தா?: சர்வதேச ஊடகங்கள் விளக்கம்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருப்பது அந்நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கத்துடன் இந்தியா ஒரு மூலோபாய உறவை ஏற்படுத்தியுள்ளமையே இதற்கான காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
அங்கு அவர் மூலம் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அகதிகளுக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த நாடுகளில் இருந்து அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், ஷேக் ஹசீனாவின் கட்சி கடந்த சில ஆண்டுகளுள் வாக்குகளை மோசடி செய்ததாகவும், அவ்வாறான சர்ச்சைக்குரிய மூன்று தேர்தல்களுக்கு இந்தியா அனுமதி வழங்கியது பங்களாதேஷியர்களை இந்தியா மீது கோபத்தை ஏற்படுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.