தமிழக துணை முதலமைச்சரானார் உதயநிதி; பதவியேற்பு குறித்து வெளியான தகவல்

தமிழக துணை முதலமைச்சரானார் உதயநிதி; பதவியேற்பு குறித்து வெளியான தகவல்

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை அளித்த கழகத்தலைவர் முதலமைச்சர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரது பதிவில்,

“துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This