உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்ட உலகின் முதல் பெண்
டாட்டூ குத்திக்கொள்வது எமது சமூகத்தில் தற்போது ட்ரெண்டாக பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த பச்சை குத்திக்கொள்ளும் முறையானது பாரம்பரியமாகவே எம் முதியோர்களிடமும் இருந்துள்ளது.
அந்த காலத்து வயதான மூதாட்டிகள் கைகளில் பார்த்தால் அதை அவதானிக்க முடியும். முப்பாட்டன் காலத்திலிருந்தே பச்சைக் குத்துவது பின்பற்றி வரப்படுகிறது.
நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெண்கள் பலரும் அவர்களது கைகளிலும், தாடை பகுதிகளிலும் பச்சைக் குத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆனால், அப்போதைய தலைமுறையினர் இயற்கை வழியில் அதை செய்துவந்த போதிலும் தற்போதைய இளம் வயதினர் இரசாயன திரவங்களையும் நிறமூட்டிகளையும் கொண்டு பச்சை குத்திக் கொள்கின்றனர்.
அவ்வாறுதான் எஸ்பெரான்ஸ் ஃபுயெர்சினா – இவர் முன்னாள் அமெரிக்க இராணுவ வீராங்கனை ஆவார். இவர் தனது உடலில் 99.98 வீதமான இடத்தில் பச்சைக் குத்தியுள்ளார்.
அவரது கண்களிலும் கூட அவர் பச்சைக் குத்தியுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அகோரமாக இருந்தாலும் அது அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகின்றார்.
தொடர்ந்து நாக்கை இரண்டாக பிளந்து நாக்கிலும் தாடையிலும் மையால் கறைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இது அவரது வாழ்க்கையில் நடந்த நினைவுகளின் தொகுப்பு எனவும் எஸ்பெரான்ஸ் ஃபுயெர்சினா கூறுகின்றார். மேலும் இவற்றை நான் எங்கும் எடுத்துச் செல்வேன். நான் நாடோடியாக வாழ்ந்திருக்கின்றேன். எனக்கு துணை யாரும் இல்லை. அதனால் டாட்டூக்களை என் துணையாக்கி கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
எஸ்பெரான்ஸ் ஃபுயெர்சினா கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
உலகின் அதிக டாட்டூக்கள் குத்திக்கொண்ட ஒரு பெண்ணாக இருப்பதில் பெருமையாக இருப்பதாகவும் எதிர்காலத்தை எண்ணி பூரிப்படைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.