கட்சி ஆதரவு தெரிவித்தாலும் நான் மேடைகளில் பங்குபற்ற மாட்டேன்

கட்சி ஆதரவு தெரிவித்தாலும் நான் மேடைகளில் பங்குபற்ற மாட்டேன்

இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு தெரிவித்தாலும் நான் மேடைகளில் பங்குபற்ற மாட்டேன், எனது முடிவை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தூணைத்தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான சீவிகே சிவஞானம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்தமை மற்றும் இது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் வெளிவருவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்தியகுழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதெனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அந்த தீர்மானத்தை ஆதரித்தனர்.

பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாட்டைக் கிளிநொச்சி கிளை சார்பில் த.குருகுலராஜா சமர்ப்பித்திருந்தார்.

இதேவேளை நான் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைக் கட்சி தீர்மானிக்காமல் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை அறிவிப்போம் என்ற கருத்தை முன்வைத்துக் கலந்துரையாடினேன். எனினும் சஜீத்தை ஆதரிப்பதாகக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஆதரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராஜா உடல் நலக் குறைவால் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாக இருந்தாலும் நான் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவினது பிரச்சார கூட்டத்திற்குச் செல்லப்போவதும் இல்லை எத்தகைய பிரச்சாரத்தையும் மேற்கொள்ள மாட்டேன் என்றார்.

CATEGORIES
Share This