வெறும் பத்தே மாதங்களில் வெவ்வேறு பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்: வியந்து போன மருத்துவ உலகம்

வெறும் பத்தே மாதங்களில் வெவ்வேறு பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்: வியந்து போன மருத்துவ உலகம்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (வயது 41) என்ற பெண்ணே மருத்துவ உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சரிதா ஹோலண்ட்டுக்கு முதல் பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் ஆனார்.

குறுகிய காலத்தில் தான் மீண்டும் கர்ப்பம் அடைந்தது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்தபோது இரட்டை குழந்தைகள் பிறக்கும் என கூறியுள்ளனர்.

சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது.

ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. 2 மாதங்கள் குறைபிரசவத்தில் அந்த குழந்தைகள் பிறந்தன.

இந்தநிலையில் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பிய நிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2 ஆவது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து 8 ஆவது மாதத்தில் மேலும் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

எனவே 10 மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றதால் அவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.

CATEGORIES
Share This