“நான் புதிய இதயத்தை பெறப் போகிறேன்”: சிறுவனின் மகிழ்ச்சி வீடியோ
அமெரிக்காவின் ஓகிஹோ மாகாணம், க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த ஜோன் ஹென்றி எனும் சிறுவன் பிறக்கும்போதே இதயக் கோளாறுகளுடன் பிறந்துள்ளான்.
இதய மாற்று அறுவை சிகிச்சையே இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
5 மாத குழந்தையாக இருக்கும்பொழுது அவனுக்கு தற்காலிக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் 6 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளான்.
இதய தானத்துக்காக காத்திருந்த ஹென்றிக்கு 6 வருடங்களின் பின்னரே இதயம் கிடைத்துள்ளது.
இவ்விடயம் ஹென்றிக்கும் அவனது குடும்பத்துக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் போவதற்கு முன்பு, இவ்வளவு காலமும் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் தாதிகளை சந்தித்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான்.
அவனது அம்மா அவன் பின்னாலேயே மருத்துவ உபகரணங்களுடன் வர “நான் புதிய இதயத்தை பெறுகிறேன்” எனக் கூறியபடி அனைவரோடும் தனது மகிழ்ச்சியை உற்சாகமாக பகிர்ந்து கொண்டான்.