சர்வதேச பொறிமுறை ஊடான நீதியே எமக்கு வேண்டும்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தினர் வலியுறுத்தல்
வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடக சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
“அதன்படி எதிர்வரும் 30 திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், அதனை முன்னிட்டு திருகோணமலையில் சிவனாலயத்திற் முன்பாக இருந்து பேரணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதே வேளை வட மாகாணத்திலும் ஒரு பேரணியை மேற்கொள்ளவுள்ளோம்.
சர்வதேச நீதி பொறிமுறையை நாடியே நாங்கள் நீதி கேட்கும் பேரணி ஒன்றினை நடத்தவுள்ளோம், இந்நிகழ்வில் அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இதற்கான நீதி வேண்டி நாம் தொடர்ச்சியாக பேராடி வருகின்றோம்
பொறுப்பு கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் சர்வதேசத்தை நாம் நாடி நிற்கின்றோம்.
முறையிட்ட எம்மைத் தான் தேடி தேடி விசாரணை செய்கின்றார்கள் அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையை நாம் நாடி நிற்கின்றோம் என்றும் மரணம் என்பது எல்லோருக்கும் வரும் அது கண் முன்னே நடந்தால் பறவாயில்லை ஆனால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வெளிக்கொணர வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.