சஜித் அணியில் நிதி நெருக்கடி?: தேர்தல் பிரச்சாரத்துக்கும் பணமில்லையாம்

சஜித் அணியில் நிதி நெருக்கடி?: தேர்தல் பிரச்சாரத்துக்கும் பணமில்லையாம்

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ள காரணத்தினால் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார பேரணிகளை நடத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அக்கட்சியின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் சேகரித்த பணத்தை செலவு செய்து பாடசாலைகளுக்காக பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் வழங்கியதாகவும் அதற்காக பாரியளவு தொகையை செலவளித்துள்ளதால் கட்சி கடுமையான நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அம்பாறை நகரில் இடமபெற்ற மக்கள் சந்திப்பில் இணைந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ,

“2019ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தலுக்கான செலவீனங்களை செலுத்தாமல் யால காட்டிற்கு சென்று விட்டார்.

இறுதியில் பணத்தை சேகரித்து அந்த தொகையை நான் உள்ளிட்ட சிலரே செலுத்தினோம்.” எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This