வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்: கொள்கைகள் குறித்து விளக்கம்

வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்: கொள்கைகள் குறித்து விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்து தமது திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே மேற்படி சந்திப்பை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

ஆளுங்கட்சி வேட்பாளர் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மொட்டு கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக் இவ்வாறு வெளிநாட்டு தூதுவர்களை, சந்தித்து வெளிவிவகாரக் கொள்கை உள்ளிட்ட விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளனர்.

அதேவேளை இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாடுகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன. தமது நாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஊடாக நிலைவரம் கண்காணிக்கப்பட்டுவருகின்றது.

CATEGORIES
Share This