“ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்“; அதுவே நாட்டிற்கு சிறந்தது

“ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்“; அதுவே நாட்டிற்கு சிறந்தது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியது சரியானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஐக்கியமாக இருப்பதே நாட்டுக்கான சிறந்த நடவடிக்கை. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்குமாறு சஜித் பிரேமதாசவை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன், ஆனால் அவர் இதற்கு முரணானவர்.

தலதா சிறந்த யோசனையை முன்வைத்தார் என்றே கூற வேண்டும். கட்சியில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய முடியும் என நம்புகின்றனர். அதனால் தொடர்ந்தும் பயணிக்கின்றனர்.

இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற முயற்சிக்கின்றனர். அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது அவ்வாறு செய்வார்கள்” என்றார்.

CATEGORIES
Share This