கல்யாணம் ஈஸி; ‘டைவர்ஸ்’ செய்வது கஷ்டம்: குழந்தை பிறப்பு குறைவதை தடுக்க சீனா திட்டம்

கல்யாணம் ஈஸி; ‘டைவர்ஸ்’ செய்வது கஷ்டம்: குழந்தை பிறப்பு குறைவதை தடுக்க சீனா திட்டம்

உலக மக்கள் தொகையில் முன்னணியில் இருந்து வந்த சீனா, கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளால், அதை கட்டுப்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும், அதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய பிரச்னைகள் எழுந்துள்ளன.

இதனால், ஒட்டு மொத்தமாக சீனாவில் இளைய தலைமுறையினர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது; போதாக்குறைக்கு, கோவிட் தொற்று காரணமாகவும், சீனாவில் லட்சக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால் எதிர்காலத்தில் பல கிராமங்கள், நகரங்கள் வசிக்க ஆளற்றதாகி விடும் என்ற கவலை அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண, விதிகளை தளர்த்தி, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்தாலும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை; மாறாக இறப்பு விகிதமே உயர்ந்தது.

குழந்தை பிறப்பு குறைந்து போனதற்கு பல காரணங்களை அந்நாட்டினர் கூறுகின்றனர். ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை. போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஆண்களில் பலர் திருமணம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். பெண்கள், வேலைக்கு சென்று சம்பாதிப்பதால், திருமணம் செய்வதை தள்ளிப்போடுகின்றனர்; அல்லது தயக்கம் காட்டுகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று அந்நாட்டு அரசு தலையை பிய்த்துக்கொள்கிறது.

விவாதம் கிளம்பியது!
இதற்கு தீர்வாக, டைவர்ஸ் செய்வதை கடினமாக்கவும், திருமணத்தை எளிதாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அவ்வளவு எளிதில் நீதிமன்றத்தில் டைவர்ஸ் கிடைக்காது; அதே நேரம் திருமணம் செய்வதாக இருந்தால், தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.அரசின் இந்த முடிவுகள் சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனிமனித சுதந்திரம் பாதிக்கும். பிடிக்காத மனைவியுடன் கட்டாயமாக வாழும் சூழ்நிலை உருவாகும்’ என அந்நாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

CATEGORIES
Share This