பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்!

பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்!

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே (Mohammad Shtayyeh) தனது இராஜினாமா கடிதத்தை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதிகரித்து வரும் வன்முறை மற்றும் காசா மீதான போரின் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் தனது அரசாங்கம் ராஜினாமா செய்வதாக பாலஸ்தீனப் பிரதமர் முகமது ஷ்டாயே அறிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் மற்றும் காசா பகுதியில் போர், இனப்படுகொலை மற்றும் பட்டினி ஆகியவற்றின் காரணமாக தாம் இராஜினாமா செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This