அமெரிக்காவில் 90 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை திறப்பு

அமெரிக்காவில் 90 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை திறப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சிலை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான ஹனமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலையாகும்.

நியூ யாா்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் ஃபுளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் 2 உயரமான சிலைகள் ஆகும்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருந்து சுமாா் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சுகா் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட ஹனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்வில் ஹெலிகாப்டா் மூலம் சிலைக்கு மலா் தூவி, புனித நீா் தெளித்து, 72 அடி நீள மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீராமா் மற்றும் ஹனுமன் நாமங்களை பக்தியோடு ஒருமித்த குரலில் கோஷமிட்டனா்.

தன்னலமின்மை, பக்தி மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் இச்சிலைக்கு ஸ்ரீராமரையும் சீதையையும் இணைப்பதில் ஹனுமனின் முக்கியப் பங்குக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒன்றிணைப்பு (யூனியன்) சிலை எனப் பெயரிடப்பட்டதாக சிலை அமைப்பாளா்கள் தெரிவித்தனா்.

CATEGORIES
Share This