சிங்கப்பூரில் குரங்கு அம்மையால் 13 பேர் பாதிப்பு
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.
குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
இந்நிலையில், சிங்கப்பூரில் எம்பாக்ஸ் கிளேட் 2 நோய்த் தொற்றினால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இந்த வாரம் பதிவான ஒரு எம்பாக்ஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மையின் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால் இது கவலையை ஏற்படுத்தி உள்ளது.