தேவை ஏற்படின் அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் – திலகரத்ன டில்ஷான்

தேவை ஏற்படின் அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் – திலகரத்ன டில்ஷான்

”தேவை ஏற்படின் தனது அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் ”என இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு ஆதரவளிக்க நான் தீர்மானித்தேன்.

விளையாட்டு அமைச்சர் பதவியை எதிர்பார்த்து நான் எதிர்க்கட்சியில் இணையவில்லை. எனக்கு நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை.

எவ்வாறாயினும்,தேவை ஏற்பட்டால் தனது குடியுரிமையை விலக்கிக் கொள்ளத் தயார்.

‘பெரிய தியாகம் செய்து விட்டேன்.. என் பிள்ளைகள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.. கட்சி வேறுபாடின்றி நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் குழந்தைகளை விட்டுவிட்டுத்தான் வந்தேன்“ இவ்வாறு திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This