ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ரணில் கோரவில்லை

ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ரணில் கோரவில்லை

ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரவில்லை. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

கேள்வி – அடுத்த அரசியல் திட்டமிடல் என்ன?

பதில் – தேர்தலில் வெற்றி பெறுவதே பிரதான திட்டம்.

கேள்வி – எவ்வாறான திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளீர்கள்?

பதில் – தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும், திட்டங்களை செயற்படுத்துவோம்.

கேள்வி – ஜனாதிபதி வேட்பாளர் பற்றி தீர்மானித்துள்ளீர்களா?

பதில் – இதுவரை இல்லை. எமது வேட்பாளரை களமிறக்குவோம்.

கேள்வி – உங்களின் கையில் தான் அதிகாரம் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறதே?

பதில் – இல்லை, இல்லை அவ்வாறில்லை. அதிகாரத்தை பகிர்ந்துகொண்டுள்ளோம்.

கேள்வி – நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா?

பதில் – அவர் சிறிது காலம் இருக்க வேண்டும்.

கேள்வி – ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாடு உள்ளதா?

பதில் – இன்னும் இல்லை. அவர் எம்மிடம் ஒத்துழைப்பு கோரவில்லை.

CATEGORIES
Share This