வரிசை யுகத்திலிருந்து இலங்கை மீண்டெழ காரணம் யார்?: உண்மையை மறைத்து நரித்தனமாக பேசும் ரணில்

வரிசை யுகத்திலிருந்து இலங்கை மீண்டெழ காரணம் யார்?: உண்மையை மறைத்து நரித்தனமாக பேசும் ரணில்

இந்திய அரசு நிதி உதவியை செய்தமையால்தான் பெற்ரோல், உணவு, எரிவாயு, மருந்து வரிசைகள் மற்றும் மின்வெட்டு, உர தட்டுபாடு ஆகியவற்றில் இருந்து இலங்கை காப்பாற்றபட்டதாக உண்மையை மறைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக பேசி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மாவனல்ல, ருவன்வெல்ல ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன்,

”இலங்கைக்கு இந்திய அரசின் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய அரசு, 2021ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கொள்கைரீதியாக முடிவு எடுத்தது. இவை ரணில் ஆட்சிக்கு வர முன்னர் தீர்மானிக்கப்பட்டவை.

அதன் பிறகு, 2022ஆம் வருட மே மாதம் பிரதமராகவும், ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் ரணில் பதவிகளை ஏற்றார். ரணில் பதவிக்கு வந்து இவற்றை பயன்படுத்தினார். ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றை கொண்டுவரவில்லை. இந்த உதவிகள் இந்திய அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும்.

இதனாலேயே, இந்நாட்டில் அத்தியாவாசிய பொருள் வரிசைகள் நின்றன. மின் வெட்டு நின்றது. விவசாயத்துக்கு தேவையான உரம் கூட ஓமன் நாட்டில் இருந்து இந்திய கடனுதவி நிதி மூலம் பெற இந்திய அரசு அனுமதி தந்தது. இதுதான் உண்மை. இதை மறுக்க முடியுமா? உண்மை தெரியாமல் பேசி திரிபவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன்.” என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
Share This