தேசியக் கொடி, மதச் சின்னங்களைப் பயன்படுத்த முற்றாகத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடி அல்லது மதச் சின்னங்களைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தும் கட்சிகள் மீது சடட் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடருமாயின் எதிர்வரும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் அவர் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல்வாதிகளை பார்க்கிறோம் அவர்கள் இல்லாமல் தேர்தல் இல்லை. தேசியக் கொடியின் பெருமை தற்போது இல்லாமற்போய் கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் போட்டிகளில் தேசியக் கொடியை சுற்றிக்கொண்டு மற்றொரு கையில் மதுபான போத்தைலை வைத்துக் கொண்டு நடனமாடுகின்றனர்.
முறையான அரசியல் கொள்கைகள் இன்மையே இதற்கு காரணம். எனவே, தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் ” என்றார்.