ஆப்கானிஸ்தான்: தலிபான்களால் 1.4 மில்லியன் சிறுமிகள் கல்வி இழப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, ஆரம்பக் கல்விக்கான அணுகலும் குறைந்துள்ளது.
குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை; ஆனால், சிறுவர்களுக்கு அனுமதியுண்டு. தலிபான்கள், சிறுமிகள் ஆறாம் வகுப்புக்குமேல் கல்வியைத் தொடர தடுக்கப்பட்டனர்; தலிபான்களில் இந்த மோசமான செயல் குறித்து கேட்டதற்கு, இஸ்லாமியச் சட்டத்தின்படு நடப்பதாக விளக்கம் அளிக்கின்றனர்.
தலிபான்களின் இந்த நடவடிக்கைகள், குழந்தைத் தொழிலாளர் மற்றும் ஆரம்பகாலத் திருமணங்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
2019 ஆம் ஆண்டில், 6.8 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்று வந்தநிலையில், 2022 ஆம் ஆண்டில் 5.7 மில்லியனாகக் குறைந்தது.
தலிபான்களால், 1.1 மில்லியன் பேர், தங்கள் பள்ளிப்படிப்பை இழந்துள்ளனர். ஒரு முழு தலைமுறையின் எதிர்காலம், இப்போது ஆபத்தில் உள்ளது என்று யுனெஸ்கோ அமைப்பு கூறுகிறது.
இந்த நிலையில், தலிபான்களின் 3 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடும் வகையில், ஆக. 14, புதன்கிழமையில், பக்ராம் விமானத் தளத்தில் கொண்டாடினர்.