விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பு: கனடாவின் தீர்மானத்தை வரவேற்ற அரசாங்கம்

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பு: கனடாவின் தீர்மானத்தை வரவேற்ற அரசாங்கம்

தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.

அண்மைய மதிப்பாய்வின் படி,விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் மூலம் குழு தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கி வருவதாக உலகத் தமிழர் இயக்க மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

மீளாய்வு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, குறித்த அமைப்புகளால் தொடர்ந்து அச்சுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது.

மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது சட்டப்பூர்வ தேவையாகும். அண்மைய மதிப்பாய்வு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது.

அண்மைகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புடன் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This