மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் பிரச்சினைகள்: ஆணைக்குழுவின் முதலாவது உப குழு அங்குரார்ப்பணம்

மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் பிரச்சினைகள்: ஆணைக்குழுவின் முதலாவது உப குழு அங்குரார்ப்பணம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 08 முக்கிய கருப்பொருள்களை கொண்டு அமைத்துள்ள உபகுழுவில் மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் சார் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவையும் அமைத்துள்ளது.

இது இலங்கை வரலாற்றில் முதன் முதலாக மலையக மக்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அமைத்துள்ள முதலாவது உப குழு என்பது சுட்டிக்காட்டதக்கதாகும்.

குறித்த உப குழுவின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலமையகத்தில் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் உபகுழுவின் செயலாளர் சட்டத்தரணி கபிலன் வில்லவராஜன், பணிப்பாளர் நிஹால் சந்திரஸ்ரீ, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களான கலாநிதி கிஹான் குணாதிலக்க , பேராசிரியர் பர்ஹானா ஹனிபா ஆகியோடு , ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரிகளோடும் , மலையக சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தி இவ் உபகுழுவுக்கு தெரிவுசெய்யப்பட்ட சிவஞானம் பிரபாகரன் , திருமதி பி .யோகேஸ்வரி, கந்தையா தனபாலசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தொடரில் உறுப்பினா் பேராசிரியர் தை . தனராஜ் குறித்த உப குழு அமைக்கப்பட்டமைக்கான நோக்கத்தை விபரித்ததுடன், தொடர்ந்து மலையக மக்களுக்கு நிலவும் நடைமுறை சார் மனித உரிமை பிரச்சனைகள் தொடர்பிலான கருத்து பரிமாறல்களும் இடம்பெற்றதோடு கலந்துரையாடப்பட்ட குறித்த பிரச்சனைகள் ,உரிமைகள் சார் விடயங்களுக்கு எவ்வாறு தர்க்க ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தியது.

மலையகத்தமிழர் உப குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் விபரம்

1.கந்தையா தனபாலசிங்கம்

  1. சிவஞானம் பிரபாகரன்

3.திருமதி பி .யோகேஸ்வரி

4.வைத்தியர் ஜோ-வில்லியம்

5.சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார்

6.நடேசன் சுரேஷ்

7.ஜீவரத்னம் சுரேஷ்குமார்

CATEGORIES
Share This