இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று: விழாக் கோலம் பூண்ட டில்லி
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இந்தியாவை பிரித்தானியர்கள் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
அவர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பிறகு 78 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முதல் தேசியக் கொடியை முன்னாள்
பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார்.
அன்றிருந்து வருடந்தோறும் ஒகஸ்ட் 15 ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியச் சுதந்திர தினத்தின்போது கொடியேற்றம், முப்படை வீரர்களின் அணிவகுப்பு, பிரதமர் உரை, வாண வேடிக்கைகள், சாகசங்கள், கலாச்சார நடனங்கள் என அன்றைய நாள் விழாக் கோலம் பூண்டிருக்கும்.
தேசிய விடுமுறை என்ற போதிலும், நாடு முழுவதும் பாடசாலைகள் , கல்வி நிலையங்கள் பல இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினம் கொண்டாடப்படும்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக விசேடமாக தயார் செய்யப்படும்.
தமிழகத்திலும் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் தேசியக் கொடியேற்றி, கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகளை வழங்கவுள்ளாா்.
இதன்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்துவார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.