91 வயதில் ஆறாவது திருமணம்: இரண்டே மாதத்தில் இறந்துபோன ஆஸ்திரிய தொழிலதிபர்:

91 வயதில் ஆறாவது திருமணம்: இரண்டே மாதத்தில் இறந்துபோன ஆஸ்திரிய தொழிலதிபர்:

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் 91 வயதில் 6வது திருமணம் செய்த நிலையில் 2 மாதத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஆஸ்திரியாவை சேர்ந்தவர் ரிச்சர்ட் லக்னர். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறந்த இவர் அந்நாட்டில் பிரபலமான கோடீஸ்வரராகவும், தொழிலதிபராகவும் திகழ்ந்தார். ஆடம்பர வாழ்க்கை மற்றும் பிரபலங்களுடன் கொண்ட நெருங்கிய நட்பால் பலரின் கவனத்தை ஈர்த்தவர். அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அந்நாட்டு அதிபர் தேர்தலில் சுயேச்சையாக இரண்டு முறை போட்டியிட்டார்.

ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்துள்ளார். அவர்கள் மூலம் ரிச்சர்ட் லுக்னருக்கு 4 குழந்தைகள் உள்ளன.

ஜூன் 1ம் தேதி, 91வது வயதில் 6வது திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ” இது தான் எனது கடைசி திருமணம் ” என ரிச்சர்ட் லுக்னர் கூறியதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

கடந்த சில நாட்களாக பல்வேறு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சமீபத்தில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட நிலையில் அவர், நேற்று( ஆக.,13) காலமானார். அவரது மறைவுக்கு ஆஸ்திரியா நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
Share This