ஒரே பெயரில் வேட்பாளர் ; கடந்த காலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம்

ஒரே பெயரில் வேட்பாளர் ; கடந்த காலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம்

ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொள்கின்றார்.

நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில் இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார்.

செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ள நிலையில் இலங்கையின் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத நீளமான வாக்குசீட்டினை எதிர்கொள்கின்றனர்.

இந்த வாக்குசீட்டில் இரண்டு நாமல்கள் காணப்படுவது வாக்குசீட்டினை குழப்பம் மிகுந்ததாக மாற்றியுள்ளது.ஆகக்குறைந்தது நாமல் ராஜபக்ச விசுவாசிகளுக்காவது.

ஒரே பெயருடைய வேட்பாளர்களை நிறுத்துவது என்பது கடந்தகாலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம்.

2015 இல் அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களை குழப்புவதற்காக ராஜபக்சாக்கள் சிறிசேன என்பவரை நிறுத்தினர் . மைத்திரிபால சிறிசேன போன்ற தோற்றமுடையவராக அவர் காணப்பட்டார்.

இந்த ஏமாற்று வேலையால் பலர் ஏமாறாத போதிலும் ராஜபக்சக்காள் நிறுத்திய ஏஆர் சிறிசேன 18174 வாக்குகளை பெற்றார்.

தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ள மற்றைய நாமல் வாக்குகளை சிதறடிப்பதில் பெயர் பெற்றவர்.

அவரது பெயரை சிங்களத்தில் எழுதினால் அது ராஜபக்சாக்களின் வாரிசின் பெயரை ஒத்ததாக காணப்படும்.

எனினும் ஆங்கிலத்தில் எச் என்ற எழுத்து மேலதிகமாக காணப்படுவது ஒருசிலரின் பார்வைக்கே அகப்படும்.

CATEGORIES
Share This