உலக இளையோர் வேலையின்மை விகிதம்: ஐ.நா வெளியிட்ட தகவல்

உலக இளையோர் வேலையின்மை விகிதம்: ஐ.நா வெளியிட்ட தகவல்

உலக அளவில் இளையோர் வேலையின்மை விகிதம் 15 ஆண்டுகளில் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று பரவலிலிருந்து சில வட்டாரங்கள் இன்னும் மீண்டுவரவில்லை என்று ஐ.நா கூறியுள்ளது.

வேலையில், கல்வியில், பயிற்சியில் இல்லாத 15 முதல் 24 வயது வரையிலானோரின் எண்ணிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நாவின் தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.

“சில வட்டாரங்களில் உள்ள இளையோரும் பல இளம் பெண்களும் பொருளியல் மீட்சியின் பலன்களைக் காணவில்லை,” என்று அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் சென்ற ஆண்டு 64.9 மில்லியன் என்று பதிவான வேலையில்லாத இளையோரின் மொத்த எண்ணிக்கை 2000ஆவது ஆண்டு தொடங்கியதிலிருந்து ஆகக் குறைவானது.

கடந்த ஆண்டு 13 வீதம் என்று பதிவான இளையோர் வேலையின்மை விகிதம் கடந்த 15 ஆண்டுக்கால இறக்கத்தைக் காட்டுகிறது.

கொவிட்-19 தொற்று பரவலுக்கு முந்தைய காலமான 2019ஆம் ஆண்டில் பதிவான 13.8 வீதத்தை காட்டிலும் அது குறைவு என்று தொழிலாளர் அமைப்பு தெரிவித்தது.

அந்த விகிதம் இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் 12.8 வீதத்துக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This