ரஷ்ய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது- உக்ரைன் தெரிவிப்பு

ரஷ்ய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது- உக்ரைன் தெரிவிப்பு

ரஷ்யாவின் உளவு-விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை கூறும்போது, அசோவ் கடலில் ரஷ்யாவின் ஏ-50 யூ உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இது ரஷ்யாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்று தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் ரஷ்யாவின் போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This