சஜித்துடன் இனி விவாதம் இல்லை: ஜே.வி.பி ஆவேசம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இனி எந்தவொரு விவாதமும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் முன் விவாதம் தொடர்பில் பயனற்ற விடயங்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சஜித் பிரேமதாச அறிவித்தது ஜூன் மாதம் 06 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி விவாதத்திற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் அதை எதிர்கட்சித் தலைவர் புறக்கணித்து விட்டார்.
இதிலிருந்து அவர் ஒரு விவாதத்தைக்கூட எதிர்கொள்ள முடியாத தலைவர் என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் இனி எந்தவொரு விவாதமும் இல்லை.
அவரை சிறுவர்கள் முன் விவாதம் குறித்த பயனற்ற விடயங்கள் கூறுவதை நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம். இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அது புதிய அரசியல் கலாச்சாரமாக இருக்க வேண்டும்” என மேலும் கூறியுள்ளார்.