விலகிப்போகும் நிலவு.. பூமியில் இனி ஒரு நாள் 25 மணி நேரம் – ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்!
பூமியில் சில ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியில் இருந்து நிலவு பிரிந்து சென்றபோது, உருவான ஒரு பாறையை வைத்து, அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை நடத்தியது. சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியிலிருந்து நிலவு பிரிந்தபோது உருவான இந்த பாறையை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பல ஆச்சரிய தகவல்கள் தெரியவந்துள்ளது.
பூமியில் இருந்து நிலவு ஆண்டுதோறும் 3.8 சென்டிமீட்டர் தூரம் விலகிச்செல்வதாகவும், இதனால் பூமியில் இருக்கும் நாட்களின் நேரம் மாறுபடலாம் என தெரியவந்துள்ளது.
இதே வேகத்தில் நிலவு விலகிச்சென்றால் 20 கோடி ஆண்டுகளில் பூமியின் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூமியில் ஒரு நாள் என்பது 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வெறும் 18 மணி நேரமாகவே இருந்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.