கேரளாவை புரட்டிப்போட்ட மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்வு

கேரளாவை புரட்டிப்போட்ட மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்வு

இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்வடைந்துள்ளது.
சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 4.30 மணிக்கு மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்த மண்சரிவினால் வெள்ளேரிமலை, மேப்பாடி, வைத்திரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பாலமொன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.

திடீரென ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கி இதுவரையில் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மண்சரிவில் சிக்குண்டுள்ள மக்களை ஹெலிகெப்டர் மூலமாக மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றிரவு வரையில், நடைபெற்ற மீட்பு பணியில் 126பேர் பலியான நிலையில், இன்று 158ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This