தனித்தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள்: புகலிடம் வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை

தனித்தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள்: புகலிடம் வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் 2021ஆம் ஆண்டு முதல் சிக்கித் தவிக்கும் 60க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு புகலிடம் வழங்குமாறு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி, உள்துறைச் செயலர் யெவெட்டர் கூப்பரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து உள்துறை செயலாளருக்கு லாம்மி அனுப்பியுள்ள கடிதத்தில் அவசர மற்றும் அதிகரிக்கும் அபாயத்தை வலியுறுத்தியுள்ளார்.

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் அண்மைய வாரங்களில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. அகதிகள் முகாமையால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொலைதூர தீவில் சிக்கித் தவிக்கும் 61 புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் G4S ஊழியர்களால் பாதுகாக்கப்பட்ட கால்பந்து ஆடுகளத்தின் அளவு வேலியிடப்பட்ட பகுதியில் அடைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் சமைத்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை மற்றும் எலிக் கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களின் கூடாரங்களையும் எலிகள் துளையிட்டுள்ளன.

அவர்களின் நடமாட்டம் கடுமையாகத் தடைசெய்யப்பட்டதுடன், தீவிர கண்காணிப்பின் கீழ், குறிப்பிட்ட நேரங்களில் முகாமுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடற்கரைப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ், டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும் தமிழ் அகதிகளின் குழுவை மீள்குடியேற்ற முன்மொழிந்ததாகவும் Byline Times வெளிப்படுத்தியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர், டியாகோ கார்சியா மீதான அவர்களின் சட்டவிரோத தடுப்புக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் திகதி டியாகோ கார்சியாவை வந்தடைந்தனர்.

அவர்கள் பயணித்த கப்பல் இந்தியப் பெருங்கடலில் சிக்கலில் சிக்கியபோது இரண்டு ரோயல் கடற்படைக் கப்பல்களால் மீட்கப்பட்ட பின்னர் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அனைத்து தனிநபர்களும் சர்வதேச பாதுகாப்பிற்கான நிலுவையில் உள்ள கோரிக்கைகளை, ஆணையாளர் ஏற்றுக்கொள்வதால், சர்வதேச சட்டத்தை மீறி இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This