70 வீதம் வேண்டும் – பசில்: நிராகரித்த ரணில் – திங்கட்கிழமை வேட்பாளர் அறிவிப்பு

70 வீதம் வேண்டும் – பசில்: நிராகரித்த ரணில் – திங்கட்கிழமை வேட்பாளர் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் இருவரும் இந்த சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்தால் உள்ளூராட்சி தேர்தலில் 30 வீதமும், மாகாண சபை தேர்தலில் 35 வீதமும், நாடாளுமன்ற தேர்தலில் 40 வீதமும் போட்டியிடுவதற்கான ஒதுக்கீடுகளை செய்வதாக ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.ஆனால், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 90 வீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 70 வீதமும், மாகாண சபை தேர்தலில் 70 வீதமும் பசில் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்படி, இந்த கலந்துரையாடல் எவ்வித தீர்வும் நேற்று முடிவடைந்துள்ளதோடு, ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This